நாடாளுமன்ற அமர்வின் போது தன் காதலை தெரிவித்து அனைவரையும் புல்லரிக்கவைத்த MP!(வீடியோ)
ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உரையின் போதே, MPஒருவர் காதலியான சக MPயை, திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி MPயான நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான MP நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார். […]













