இந்தியா செய்தி

செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் 72 மணி நேர தொடர் போராட்டம்

  • April 19, 2023
  • 0 Comments

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் 72 மணி நேர தொடர் போராட்டத்தை தொடங்கியிருந்தனர். இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அந்த மருத்துவமனைகள் செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று 50% ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும் மீதமுள்ள மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நிர்வாகங்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இன்னும் எந்த […]

இந்தியா செய்தி

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

  • April 19, 2023
  • 0 Comments

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 7830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 7946 ஆக இருந்தது. அதன் பிறகு கடந்த 223 நாட்களில் இல்லாத அளவுக்கு தற்போது ஒரு நாள் பாதிப்பு உயர்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று […]

இந்தியா செய்தி

திருமணம் செய்ய மறுத்த 10ஆம் வகுப்பு மாணவி..மனமுடைந்து விபரீத முடிவெடுத்த 17 வயது மாணவர்!

  • April 19, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டேவின் பீச்சகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (17). கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்த மனோகர், 10ஆம் வகுப்பு படிக்கும் பாடசாலை மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.ஆனால், குறித்த மாணவி காதலை ஏற்க மறுத்ததால் மனோகர் கல்லூரிக்கு செல்லாமல், லொறி கிளீனர் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனோகர் […]

இந்தியா செய்தி

முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்

  • April 19, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் டேவிட் வார்னர் நிதானமாக ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக ஆட முற்பட்ட பிருத்வி ஷா 15 ரன்கள், மணீஷ் பாண்டே 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் யாஷ் துல் (2), ரோவன் […]

இந்தியா செய்தி

172 ஓட்டங்களை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

  • April 19, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் டேவிட் வார்னர் நிதானமாக ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக ஆட முற்பட்ட பிருத்வி ஷா 15 ரன்கள், மணீஷ் பாண்டே 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் யாஷ் துல் (2), ரோவன் […]

இந்தியா செய்தி

திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மணப் பெண்

  • April 19, 2023
  • 0 Comments

வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தனது திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்ட பெண்ணை பொலிசார் தேடி வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் காணொளியில் அந்த பெண் தனது கணவரின் அருகில் அமர்ந்து நான்கு ரவுண்டுகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதைக் காட்டுகிறது. சம்பவத்தில் இருந்து காணாமல் போன பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக உள்ளூர் பொலிசார் தெரிவித்தனர்.  

இந்தியா செய்தி

1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
  • 0 Comments

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. டூ பிளெசிஸ் 79 ரன்களுடன் களத்தில் இருந்தார். விராட் கோலி 61 ரன்களும், மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். […]

இந்தியா செய்தி

இமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்த பெங்களூரு அணி

  • April 19, 2023
  • 0 Comments

ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி, கேப்டன் டூ பிளெசிஸ் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். விராட் கோலி 44 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 61 […]

இந்தியா செய்தி

தற்காலிக கொட்டகையின் மீது மரம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்

  • April 19, 2023
  • 0 Comments

இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் தற்காலிக கொட்டகையின் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கோவிலுக்கு வெளியே மத விழாவிற்காக கூடியிருந்தனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் தற்காலிக கட்டிடத்தின் மீது மரம் விழுந்ததில் 35 பேர் இடிபாடுகளுக்கு அடியில் […]

இந்தியா செய்தி

ஒரே சிறையில் பெண் கைதி உட்பட 44 கைதிகளுக்கு HIV பாதிப்பு – அதிர்ச்சியில் அதிகாரிகள்!

  • April 19, 2023
  • 0 Comments

உத்திரகாண்டில் ஒரு பெண் கைதி உட்பட 44 கைதிகளுக்கு HIV பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்ததும் சிறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்திரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறைச்சாலையில் ஒரு பெண் கைதி உட்பட, 44 பேருக்கு 44 கைதிகளுக்கு HIV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுசீலா திவாரி மருத்துவமனையின் ART மைய பொறுப்பாளர் டாக்டர் பரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார். இந்த சிறைச்சாலையில் 1,629 ஆண் கைதிகளும், 70 பெண் கைதிகளும் உள்ளனர். இந்த சிறையில் அடுத்தடுத்து […]

error: Content is protected !!