வட அமெரிக்கா

கருகலைப்பு மாத்திரைகளுக்கு அனுமதி அளித்த அமெரிக்க உச்சநீதிமன்றம்!

  • April 23, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் கருக்கலைப்பு தடை சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பெண்கள் தங்கள் கருவை விருப்பப்பட்டால் கலைத்துக் கொள்ளும் உரிமை இருந்து வருகிறது.இதற்கான கருக்கலைப்பு மாத்திரைகள் கூட அமெரிக்க மருத்துவ சந்தைகளில் விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில் கருக்கலைப்பு சட்டத்தை தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட வழக்கில் அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் வோஷிங்டன் நீதிமன்றங்கள் […]

இந்தியா

தனிநாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அம்ரித்பால் சிங் கைது!

  • April 23, 2023
  • 0 Comments

இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாதியாக கருதப்படும் அம்ரித்பால் சிங் பஞ்சாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சீக்கியர்களுக்கு என தனிநாடு தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் அமைப்பின் தலைவராக கருதப்படுபவர் அம்ரித்பால் சிங். இவர் பஞ்சாபி நடிகர் தீப் சித்து உருவாக்கிய ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பினை நிர்வகித்து வருகிறார். பஞ்சாபில் முக்கிய நபராக குறுகிய காலத்திலேயே வலம் வந்த அம்ரித்பால், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு மிரட்டல் விடுத்ததால் நாடு முழுவதும் அறியப்படும் நபராக […]

இலங்கை

சாவகச்சேரியில் கைக்குண்டொன்று மீட்பு – பொலிஸார் விசாரணை!

  • April 23, 2023
  • 0 Comments

சாவகச்சேரி,  சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கைக்குண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் தனது வீட்டு வளவினை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இந்த  கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.  இதனையடுத்து அவர் அந்த கைக்குண்டை  சாவகச்சேரி,  தம்பதோட்ட இராணுவ முகாமுக்கு எடுத்துச்சென்று இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். இராணுவத்தினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தற்போது சாவகச்சேரி பொலிஸார் இந்த கைக்குண்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு

அரசியலுக்கு அத்திவாரம் போட்ட தளபதி : ஆடியோ லாஞ்சை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!

  • April 23, 2023
  • 0 Comments

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 60 வீதமான படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதற்கிடையே தளபதி அரசியலுக்கு வருவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளாராம். இதனால் லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் இதற்கான அஸ்திவாராமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. எப்போதுமே விஜய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் சென்னையில் மட்டுமே நடைபெறும். ஆனால் இந்த முறை லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை திருச்சியில் […]

ஆப்பிரிக்கா

சூடான் மோதலில் பிரெஞ்சு நாட்டவர் பலி!

  • April 23, 2023
  • 0 Comments

உள்நாட்டு மோதல் காரணமாக சூடானில் இருந்து தங்கள் நாட்டு பிரஜைகளை வெளியேற்றுவதில் பிரெஞ்சு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அவ்வாறாக அங்கிருந்து வெளியேறும் போது பிரஞ்சு நாட்டவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  கார்ட்டூமில் இருந்து வெளியேறும்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் யார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டது என்ற தகவல் வெளியாகவில்லை. மாறாக மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று காலை தூதரகத்திற்கு வெளியே இருந்த வாகனத் தொடரணி […]

ஆசியா

2ம் உலக போரின்போது கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் 80 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு

  • April 23, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டை சேர்ந்த மான்டிவீடியோ மாரு என்ற பெயரிலான கப்பலானது ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சுமந்து கொண்டு கடலில் பயணம் செய்து கொண்டிருந்தது. 1942ம் ஆண்டு 2ம் உலக போர் நடந்த சமயம் அது. பப்புவா நியூ கினியாவில் வைத்து 850 போர் கைதிகள் மற்றும் பொதுமக்களில் 200 பேரை சிறை பிடித்த ஜப்பானியர்கள் அந்த கப்பலில் பயணித்து உள்ளனர். அந்த வழியே அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலான யூ.எஸ்.எஸ். ஸ்டர்ஜன் வந்து உள்ளது.இந்த நிலையில், கப்பலில் யார் இருக்கிறார்கள் […]

ஆப்பிரிக்கா

சூடானில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கர்களை வெளியேற்ற நடவடிக்கை !

  • April 23, 2023
  • 0 Comments

சூடானில் வன்முறை வெடித்துள்ள நிலையில், அங்கிருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஒவ்வொரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில்,  கார்ட்டூமில் இருந்து அமெரிக்க பணியாளர்கள் வெளியேற்றப்படுவதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உறுதிப்படுத்தினார். ஹெலிகொப்டர்கள் மூலம் அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது துப்பாக்கிச் சூடு எதுவும் இடம்பெறவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை வெளியேற்றுவதற்காக  மூன்று MH-47 ஹெலிகாப்டர்களிலும், சுமார் 100 அமெரிக்க துருப்புக்களும் களமிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்பு பணியாளர்கள் சுமார் 70 […]

ஐரோப்பா

சூடானிலிருந்து 150 பேரை கப்பல் மூலம் மீட்டடெடுத்த சவுதி அரேபியா

  • April 23, 2023
  • 0 Comments

சூடானில் கடுமையான போர் நடைபெறும் வேலையில் அங்கிருந்து இந்தியர்கள் உட்பட , 150 வெளிநாட்டினரை சவுதி அரேபிய அரசு கப்பல் மூலம் மீட்டுள்ளது. சூடான் நாட்டில் ராணுவ மற்றும் துணை ராணுவத்தினரிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் 400 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் ராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்களும் அடங்குவர். மேலும் சில வெளிநாட்டவரும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தடுமாறி […]

இலங்கை

சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்க வேண்டிய தேவை இல்லை – பிரசன்ன ரணதுங்க!

  • April 23, 2023
  • 0 Comments

அரசியலமைப்புக்கு அமைய ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஜனாதிபதி பிரதமர் பதவிகளில் மாற்றம் ஏற்படாது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடுவலை பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு    பிரதமர் பதவி வழங்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது. நெருக்கடியான சூழலில் தலைமைத்துவத்தை ஏற்கும் தைரியம் […]

இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு வலியுறுத்தும் சிவில் சமூக பிரதிநிதிகள்!

  • April 23, 2023
  • 0 Comments

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு சிவில் சமூக பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில், பயங்கரவாதத்தடைச் சட்டத்தைவிட மிகமோசமான இச்சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையாக வாபஸ் பெறவேண்டுமென மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர். அதன் ஓரங்கமாக சிவில் சமூக உறுப்பினர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக சந்திப்புக்களை […]

error: Content is protected !!