இலங்கை

தற்போதைய மிதமிஞ்சிய வெப்பநிலையால் சிறுவர்கள், கர்பிணிகளுக்கு ஆபத்து!

  • April 24, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது காணப்படும் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகள்> கர்ப்பிணித்தாய்மார்கள்  முதியவர்கள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளை பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என இலங்கைமருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்தள்ளார். அதேநேரம் அவ்வாறானவர்களுக்கு நீரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆபத்தை எதிர்கொள்பவர்கள் பகலில் வெளியே செல்வதை முடிந்தளவிற்கு  தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடுன், 2.5லீற்றர் நீரை அருந்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். காலநிலையை கருத்தில்கொண்டுள்ள தொழிலாளர்கள் பணிபுரியும் நேரத்தை நிறுவனங்கள் மாற்றவேண்டும் எனவும் அவர் […]

ஆஸ்திரேலியா

இன்று நியூசிலாந்தில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

  • April 24, 2023
  • 0 Comments

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அறிந்திருக்க வேண்டியவை

அமெரிக்காவில் சுற்றுலா விசாவில் செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • April 24, 2023
  • 0 Comments

அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு விதமான விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாக்களில் எச்1பி விசா அதாவது தற்காலிக விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் சுற்றுலா விசா மற்றும் வணிக விசாவில் ஏராளமானோர் அமெரிக்காவிற்குச் சென்று வருகிறார்கள். ஆனால், இவர்கள் குறிப்பிட்ட காலம் வரையில் தான் அங்கு இருக்க முடியும். அதனால், அமெரிக்காவிற்கு செல்பவர்கள் அங்கு பணிபுரிவதற்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் அமெரிக்க விசாவில் புதிய நடைமுறை […]

இலங்கை

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் எனக் கோரிக்கை!

  • April 24, 2023
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உத்தேச பயங்கரவாத  எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல் என்ற  அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியுமே பிரதான விடயங்கள் என   அந்த  அமைப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை ஒரு தசாப்தகாலமாக பெருந்துயரங்களை துன்பங்களை அனுபவித்துள்ளது எனவும்,  கடந்தகால தவறுகளை சரி செய்து சரியான சட்டமூலத்தை உருவாக்குவது தற்போதைய  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் அந்த அமைப்பு  சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள்  […]

இலங்கை

நாளைய தினம் வடக்கு – கிழக்கில் பாடசாலைகள் இயங்காது!

  • April 24, 2023
  • 0 Comments

நாளை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் யாழ். மாவட்டச் செயலர் ஜெயராஜ் குலேந்திர வொல்வின் தெரிவித்தார். அதோடு கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் விளைவுகளை நாம் முழுமையாக அனுபவித்துள்ளோம்.இந்த நிலையில் புதிதாகக் கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் மக்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள். வடக்கு – கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் சார்பாக ஆதரவை வழங்குவதோடு ஒவ்வொரு ஆசிரியரும் […]

கருத்து & பகுப்பாய்வு

சிட்னியில் வேலை பெறுவது எப்படி?

  • April 24, 2023
  • 0 Comments

சிட்னியில் வேலை பெற, நீங்கள் தொடங்கலாம் உண்மையில் சிட்னி மற்றும் கும்ட்ரீ சிட்னி. நீங்கள் சிட்னியில் ஆட்சேர்ப்பு முகவர் அல்லது வேலைவாய்ப்பு முகமைகளைத் தேடலாம். மேலும் நீங்கள் சிட்னியில் உள்ள Facebook குழுக்களிலும் வேலை தேடலாம். சிட்னியில் வேலை பெற விரும்பும் அனைவரும் முதலில் சிட்னியில் வேலை தேட வேண்டும். நீங்கள் ஒரு வேலையைக் கண்டுபிடித்தவுடன், உங்களுக்கு பணி அனுமதி தேவைப்படலாம். வெளிநாட்டிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ இதைச் செய்யலாம். ஆஸ்திரேலிய குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், வேலை பெற […]

கருத்து & பகுப்பாய்வு

ஜெர்மனியில் வேலை தேடுவது எப்படி?

  • April 24, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வேலை தேட, நீங்கள் தொடங்கலாம் Steptone.de மற்றும் arbeitsagentur.de. ஜெர்மனியில் வேலை தேட விரும்பும் அனைவரும் முதலில் ஜெர்மனியில் வேலை தேட வேண்டும். நீங்கள் ஜெர்மனியில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களைத் தேடலாம். ஜெர்மனியில் பேஸ்புக் குழுக்களில் நீங்கள் வேலை தேடலாம். நீங்கள் ஒரு வேலையைக் கண்டுபிடித்தவுடன், உங்களுக்கு பணி அனுமதி தேவைப்படலாம். வெளிநாட்டிலோ அல்லது ஜெர்மனியிலோ இதைச் செய்யலாம். ஜெர்மன் குடிமக்கள், மற்றும் குடியிருப்பாளர்கள், வேலை தேடுவதற்கு பணி அனுமதி தேவையில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மற்ற ஒவ்வொரு […]

இந்தியா

தெரு நாய்கள் தாக்கியதால் பலியான 7 வயது சிறுவன் ; அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

  • April 24, 2023
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுவன் தெருநாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டம், பிலாரியில் தந்தை மற்றும் தாய்க்கு தேநீர் வாங்கிக்கொண்டு வருவதற்காக சவேந்திர குமார் என்ற 7 வயது சிறுவன் தன்னுடைய அக்காவுடன் கடைக்குச் சென்றான். அப்போது, தெருவில் நின்றுக்கொண்டிருந்த தெருநாய்கள் கூட்டத்தில் சவேந்திர குமார் சிக்கிக்கொண்டான். இதைப் பார்த்த சகோதரி தம்பியை நாய்களிடமிருந்து மீட்க போராடினாள். ஆனால், சிறுவனால் தெருநாய்கள் தாக்குதலிலிருந்து மீள முடியாமல் போனது. […]

இலங்கை

கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பம்!

  • April 24, 2023
  • 0 Comments

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று முதல் சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பமாகியுள்ளன. இன்று முதல் வழமை போன்று கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் இடம்பெறும் என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பல நோயாளிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, கண் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ப்ரெட்னிசோலோன் எனப்படும் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் […]

பொழுதுபோக்கு

அயலான் திரைப்படத்தின் அட்டகாசமான அப்டேட்!

  • April 24, 2023
  • 0 Comments

இயக்குநர் ரவிகுமார்,  சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்ளிடையே கேள்வி எழுந்தது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அயலான் […]

error: Content is protected !!