நேபாளத்தில் பெய்துவரும் கனமழை… நிலச்சரிவில் சிக்கி எழுவர் பலி..!

நேபாளத்தின் மேற்கே சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பாக்லங் மாவட்டத்தின் பதிகத் கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் பலர் சிக்கி கொண்டனர். 2 வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்து உள்ளனர். காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள், உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பகுதிக்கு நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி தகவல் அறிந்து நேபாள பொலிஸார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சம்பவ பகுதிக்கு சென்றது. அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
(Visited 37 times, 1 visits today)