சீனாவின் வசமாகும் ஹம்பாந்தோட்டை பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம்!
புதிய ஹம்பாந்தோட்டை பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்பு செயலாக்க மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் SINOPEC க்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்த தகவலை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் சினோபெக் கம்பனியால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை நாளை (28.11) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)