சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
சிங்கப்பூர் வருவோர் இனி பாஸ்போர்ட் பயன்பாடு இல்லாமலேயே சிங்கப்பூரை வீட்டு இலகுவாக செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார் வழியாக சிங்கப்பூரில் இருந்து வெளியேறுவோர் QR கோடுகளை தரைவழி சோதனை சாவடிகளில் பயன்படுத்தலாம். அப்படி இல்லையென்றால், பயணிகளில் கூடங்களில் புதிய ABCS தானியக்க முறையை பயன்படுத்தி கொள்ளலலாம் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த தானியக்க முறை விரிவு செய்யப்படுவதால், சோதனை சாவடிகளில் அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் தாமாகவே பயணிகள் வெளியேற முடியும் என கூறப்பட்டுள்ளது.
முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு சாங்கி விமான நிலையத்தின் முனையம் நான்கில் சோதனை செய்யப்பட்டது.
விரைவாகவும், அதே சமயத்தில் பாதுகாப்பாகவும் பயணிகள் வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முறை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறை முதற்கட்டமாக வரும் 2024 ஆம் ஆண்டு எல்லா இடங்களிலும் நடப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.