ஐரோப்பா

ஜெர்மனியில் லொட்டரி (lottery ) மூலம் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் முறை – பிளவுப்பட்ட கூட்டணி அரசாங்கம்!

ஜெர்மனியில் லொட்டரி (lottery ) மூலம் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்த திட்டங்கள்  ஜெர்மனியின் கூட்டணி அரசாங்கத்தைப் பிளவுபடுத்தியுள்ளன. மெர்ஸின் (Friedrich Merz) மைய-வலது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (CDU) மற்றும் அவரது மைய-இடது சமூக ஜனநாயகக் கட்சி (SPD) கூட்டணியை பிளவுப்படுத்தியுள்ளன.

ரஷ்யாவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஃபிரெட்ரிக் மெர்ஸின் (Friedrich Merz) அரசாங்கம் இளைஞர்களுக்கான புதிய இராணுவ சேவைத் திட்டத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது.

ஆனால் இந்தத் திட்டம் போராடத் தகுதியான ஜெர்மன் இராணுவத்திற்கு போதுமான வீரர்களை உருவாக்குமா என்பது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜெர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் பிஸ்டோரியஸ் (Pistorius)  திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பில் தனது கட்சி பிளவுப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்