செய்தி

பஞ்சத்தின் விளிம்பில் காஸா – பரிதாப நிலையில் மக்கள்

இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில் காஸா பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஸாவின் முழு மக்கள்தொகை வெவ்வேறு நிலையிலான பசி பட்டினியை எதிர்நோக்குவதாய் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது..

இதே போக்கில் போர் தொடர்ந்தால் அடுத்த 6 மாதங்களில் காஸா கடும் பஞ்சத்தில் வாடும் என கூறப்படுகின்றது.
சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் போர் தொடங்கியது.

அதிலிருந்து அங்குள்ள மக்கள் உணவுக்காகப் போராடுகின்றனர். உதவிப் பொருள்கள் போதவில்லை.

தற்போதைய நிலை குறித்து ஐக்கிய நாட்டு நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

அரை மில்லியன் பேர் பசியால் வாடுவதாக அவர்கள் கூறினர். உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அது 4 மடங்கு அதிகமாகும்.

பஞ்சத்தில் வாடும் பகுதியாக வகைப்படுத்த சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று 20 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பட்டினியால் வாடுவது.

கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு, மரணங்களின் எண்ணிக்கையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

மனிதநேய அடிப்படையிலான சண்டை நிறுத்தம் இந்த நிலையை மாற்றக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் கூறுகிறது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி