முன்னாள் பிரதியமைச்சருக்கு கடூழியச் சிறைத்தண்டனை
முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 04 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பெண் ஒருவருக்கு வேலை வழங்குவதற்காக 50,000 ரூபா லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் குற்றவாளியாக காணப்பட்டார்.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி 2017 இல் சாந்த பிரேமரத்ன முன்வைத்த மேன்முறையீட்டை நிராகரித்த சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன் இரத்தினம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையையே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
(Visited 35 times, 1 visits today)





