சீன கப்பலைத் தொடர்ந்து மற்றுமொரு நாட்டின் போர் கப்பலும் இலங்கை துறைமுகத்தில்!
தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான ‘குவாங்கெட்டோ தி கிரேட்’ என்ற போர்க்கப்பல் இன்று (26.10) காலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தென் கொரிய போர்க்கப்பல் ஒன்று 2017 அக்டோபரில் இலங்கைக்கு வந்துச் சென்றது. இதன்பின்னர் தற்போதுதான் இலங்கைக்கு வருகைதந்துள்ளது.
இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் கீழ் தெற்காசிய பங்குதாரர்களுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக தென் கொரிய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் கொரிய கடற்படையின் கடற்கொள்ளை எதிர்ப்பு பிரிவுக்கு சொந்தமானது, இது கூட்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரிய மற்றும் பிற கப்பல்களின் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதேவேளை சீனாவின் ஆய்வுக் கப்பலான சீயான 06 இலங்கையில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.