சிங்கப்பூரில் கடுமையான நகர்ப்புற வெப்பம் – சமாளிக்க தீவிர முயற்சி
சிங்கப்பூரில் நகர்ப்புற வெப்பத்தை சமாளிப்பதற்கான புதிய நடைமுறையை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, ஆற்றலை மேம்படுத்த வரைபடத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
அதற்காக வெப்பநிலை, சாலை வரைபடங்கள் போன்ற தகவல்களைச் சிங்கப்பூர் நில ஆணையம் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்துடன் பகிர்ந்துகொள்ளும்.
கடும் வெப்பம் உருவாகும் பிரச்சினைக்குரிய இடங்களை அடையாளம் காண வரைபடங்கள் உதவும் என்று ஆணையம் நம்புகிறது.
கட்டடங்களும் சாலைகளும் சூழ்ந்த அத்தகைய பிரச்சினைக்குரிய இடங்களை ஆராய்வதன் மூலம் அதிகரிக்கும் வெப்பநிலையைச் சமாளிக்க இன்னும் சிறந்த வகையில் நகர்ப்புறத்தைத் திட்டமிடலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஆணையமும் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் பருவநிலை ஆய்வுத் திட்டங்களின் மூலம் திறனாளர்கள் உருவாக்கப்படுவர்.





