இலங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
இலங்கையில் கடந்த 11ஆம் திகதி காலை வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு அத்தனகலு ஓயா குளத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த எச்சரிக்கையை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு தெஹியோவிட்ட, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான, வத்தளை ஆகிய தாழ்வான பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் அவ்வீதிகளின் ஊடாக பயணிக்கும் சாரதிகள் என திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.





