தனிநபர் சுதந்திர உரிமைகளின் அடிப்படையில் முதலிடங்கள் பிடித்த ஐரோப்பிய நாடுகள்
தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமைகள் மிக உயர்ந்த அளவில் பாதுகாக்கப்படும் நாடுகளில் சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு மக்களுக்கு இருக்கும் வாய்ப்புகளின் அடிப்படையில் இந்த தரவரிசை world of Statistic வெளியிடப்பட்டது.
தரவரிசையில் 100 புள்ளிகள் பெற்ற பின்லாந்து முதலிடத்தையும், 99 புள்ளிகள் பெற்ற சுவீடன் 2வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 99 புள்ளிகளுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும், 98 புள்ளிகளுடன் நோர்வே நான்காவது இடத்தையும் பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமனித சுதந்திர உரிமைகள் பாதுகாக்கப்படும் நாடுகளில் ஆஸ்திரேலியா 12வது இடத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த தரவரிசையில் ஆஸ்திரேலியா 95 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
தனிமனித சுதந்திரத்திற்கான மிக உயர்ந்த பாதுகாப்பு கொண்ட நாடுகளில் சிரியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் அவர்கள் தரவரிசையில் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.