Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் மீண்டும் நிலநடுக்கம் – 2 வாரங்களில் மூன்றாவது முறை

விக்டோரியாவின் தென்கிழக்கு பகுதியான ஃபோஸ்டரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 08.30 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 அலகுகளாக பதிவானது.

அதன் மையம் பூமிக்குள் சுமார் 07 கிலோமீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளது.

இரண்டு வாரங்களில் மெல்போர்னில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும்.

சில நாட்களுக்கு முன்பு விக்டோரியாவின் மார்னிங்டனில் 2.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் சன்பரி அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Exit mobile version