இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் விரைவில் கலந்துரையாடல் – IMF அறிவிப்பு
இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் விரைவில் கலந்துரையாடவுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 3ஆம் மதிப்பாய்வுக்கான காலம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சென்ற இலங்கையின் பொருளாதாரத்தை மீட்சிக்கான பாதையில் கொண்டு செல்வதற்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவும் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் சர்வதேச பிணைப் பத்திர உரிமையாளர்களுடன் இலங்கை அண்மையில் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.