ஜெர்மனியில் இருந்து அகதிகளை நாடு கடத்தும் பணிகள் தீவிரம்
ஜெர்மனியில் இருந்து அகதிகளை திருப்பி அனுப்பும் பணிகள் மிகவும் கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
சக்சன் மாநில அரசாங்கமானது இந்த மாநிலத்தில் நிராகரிக்கப்பட்ட அகதிகளை நாடு கடத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மற்றைய மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது சக்சன் மாநிலமானது அகதிகளை அனுப்புகின்ற விடயத்தில் முன் உதாரணமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது மாநிலமானது சில அகதி முகாம்களில் ஹவுஸ் ரைசிஸ் என்று சொல்லப்படும் நாட்டை விட்டு கடத்துவதற்குரிய நிலையங்களை உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சக்சன் மாநிலமானது கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வரை மொத்தமாக 726 பேரை இந்த மாநிலத்தில் இருந்து நாடு கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த விருப்பத்தின் அடிப்படையில் குறித்த மாநிலத்துக்கு துருக்கி, ஜோர்ஜியா மற்றும் வெனிசுலா , வடக்கு மக்சுலோனியன் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் திருப்பி செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டளவில் அகதிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கமானது திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.