கச்சா எண்ணெய் கொள்வனவு ஜி7 நாடுகள் நிர்ணயித்த விலைக்கு அமைவாக இருக்க வேண்டும் – அமெரிக்கா!
ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கான விலை வரம்பை ஜி7 நாடுகள் நிர்ணயித்துள்ள நிலையில், இதனை இந்தியாவும் பின்பற்றும் என வெள்ளை மாளிகை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா எண்ணெயை கொள்வனவு செய்யும்போது அது ஜி7 நாடுகள் நிர்ணயித்த விலை வரம்பிலோ அல்லது அதற்கு குறைவாகவோ இருக்கும் என்று அமெரிக்கா நம்புவதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கருத்த வெளியிட்டுள்ள தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி ரஷ்ய எண்ணெய் கொள்முதல் பற்றி இந்தியா தனது சொந்த விருப்பங்களைச் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் ரஷ்ய எண்ணெயை விலை வரம்பிற்கோ அல்லது அதற்குக் குறைவாகவோ வாங்குவதை நாங்கள் தொடர்ந்து பார்க்கலாம் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)