ஜெர்மனியில் கொரோனா மோசடிகள் – 26 ஆயிரம் விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள்
ஜெர்மனியில் கொரோனா மோசடிகள் குறித்து 26 ஆயிரம் விசாரணைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
ஜெர்மனியில் கொரோனா காலங்களில் மோசடி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியமைக்கான அத்தாட்சி பத்திரங்கள் தொடர்பில் கண்டுப்பிடிக்கப்பட்ட 26 ஆயிரம் வழக்கு விசாரணைகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை ஜெர்மனியில் குற்ற தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 2021 ஏப்பிரல் மாதத்துக்கும் 2022 நவம்பர் மாதத்துக்கும் இடையில் இவ்வாறான குற்றவியல் சம்பவம் நடைபெற்றதாகவும்,
இதில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் மொத்தமாக 6425 இவ்வகையான மோசடிகள் காணப்பட்டுள்ளது.
பாடன்புட்டன்பேர்க் மாநிலத்தில் 1843 இவ்வகையான சம்பவங்களும், ரைனாட்ஃபன்ஸ் மாநிலத்தில் 1919 இவ்வகையான சம்பவங்களும், இன்டர்சக்ஸன் மாநிலத்தில் 1500 இவ்வகையான மோசடிகளும், எஸன் மாநிலத்தில் 754 மற்றும் பிரண்டபேர்க் மாநிலத்தில் 805 சம்பவங்களும் இடம்பெற்றதாக தெரியந்துள்ளது.
பொலிஸார் இது சம்பந்தமாக வழக்கு விசாரணைகளை ஆரம்பித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.