சீனாவில் வலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது மகன் – குவியும் பாராட்டு

சீனாவில் புஜியன் மாகாணத்தில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு பிரசவம் பார்த்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே மகன் பிரசவம் பார்த்துள்ளார்.
தனது 37 வார கர்ப்பிணித் தாயிற்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக 13 வயது சிறுவன் அவசர சிகிச்சை நிலையத்திற்கு அழைப்பு மேற்கொண்டுள்ளார்
நோயாளர் காவு வண்டி வர தாமதமானதால், தொலைபேசியில் வைத்திய உதவியாளர் ஒருவரின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார்.
பிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறிது நேரத்திற்குப் பிறகு, வைத்திய உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுவனை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
குறித்த தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.