இந்திய அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீனா அறிவிப்பு
இந்திய அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் சீன பயணத்தின் போது சீன வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இருநாட்டுத் தலைவர்களுக்கிடையிலான முக்கியமான பொதுவான புரிந்துணர்வை நடைமுறைப்படுத்தவும், இருதரப்பு உறவுகளை விரைவில் மீட்டெடுக்கவும் இரு தரப்பும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெய்ஜிங், ஒருவருக்கொருவர் அடிப்படைத் தேவைகள் மற்றும் முக்கிய நலன்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும், உரையாடல் மற்றும் தொடர்பு மூலம் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், நேர்மை மற்றும் நல்ல நம்பிக்கையுடன் வேறுபாடுகளை சரியாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.
இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்த செய்தியாளர் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், “சீனா மற்றும் இந்தியா தலைவர்களுக்கு இடையேயான முக்கியமான பொதுவான புரிதலை செயல்படுத்தவும், ஒருவருக்கொருவர் அடிப்படை நலன்களை மதிக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. .”
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று பீஜிங்கில் நேற்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் இந்திய-சீனா எல்லைப் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2019 டிசம்பருக்குப் பிறகு இதுபோன்ற உயர்மட்ட பேச்சுவார்த்தை இதுவே முதல்முறையாகும்.