இந்தோ-கனடியர் ஒருவருக்கு எதிராக கனேடிய சட்ட அமலாக்க பிரிவினர் இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் கோரியுள்ளனர்!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கருதப்படும் இந்தோ-கனடியர் ஒருவருக்கு கனேடிய சட்ட அமலாக்கப் பிரிவினர் இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் கோரியுள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையின் (RCMP) பிரிட்டிஷ் கொலம்பியா பிரிவின் ஃபெடரல் சீரியஸ் & ஆர்கனைஸ்டு கிரைம் (FSOC) பிரிவு, சர்ரே நகரத்தைச் சேர்ந்த 60 வயதான ராஜ் குமார் மெஹ்மிக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்று கூறியது.
அவர் அமெரிக்காவில் இருந்து கடத்தல் பொருட்களை கொண்டு வர முயன்றதாகவும் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்க சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)