இலங்கையர்களுக்கு கனடா ஆசைக்காட்டி ஏமாற்றும் கும்பல்

கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரதான கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 05 பேரை ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர், 26 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் கனடா விசாவினை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்ததுடன், அந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இவரே என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 7 times, 1 visits today)