ஐரோப்பா

தாய்லாந்தில் இருந்து பெருந்தொகை போதைப்பொருளைக் கடத்திய பிரித்தானிய மொடல் அழகிக்கு சிறை!

ஸ்பெயினுக்குள் கிட்டத்தட்ட £200,000 மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்த முயன்ற  பிரித்தானிய மொடல் அழகி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிங்ஹாம்ஷையரின் ஹூத்வைட்டைச்  (Nottinghamshire, Huthwaite)  சேர்ந்த கிளாரா வில்சன் என்ற பெண்ணிற்கே 03 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் இருந்து 34 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை தனது பையில் மறைத்து வைத்திருந்த நிலையில் அவர் பார்சிலோனா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதுடன், £750,000இற்கும் அதிகமான தொகையை அபராதமாக செலுத்த உத்தரவிட்டுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்