மினி வெப்ப அலைக்கு தயாராகும் பிரித்தானியா!

பிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் அதிகளவிலான வெப்பநிலை நிலவும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வெப்பக் காற்று வீசும் பகுதியை வானிலை வரைப்படங்கள் காட்டியுள்ளன.
கிழக்கு ஆங்கிலியாவில் வெப்பநிலை உச்சத்தை எட்டும். அங்கு 22 பாகை செல்ஸியஸ் வரை வெப்பநிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தென்கிழக்கில் வசிக்கும் மக்களும் வெப்பத்தை அனுபவிப்பார்கள் என்று WXcharts தெரிவித்துள்ளது.
வொர்செஸ்டர்ஷயர், ஹியர்ஃபோர்ட்ஷயர், ஷ்ராப்ஷயர், ஸ்டாஃபோர்ட்ஷயர், செஷயர், டெர்பிஷயர், மற்றும் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு யார்க்ஷயர் உள்ளிட்ட மொத்தம் 22 மாவட்டங்கள் ‘மினி வெப்ப அலை’யை இழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டர்ஹாம், வெஸ்ட்மோர்லேண்ட், கம்பர்லேண்ட், லங்காஷயர், நார்தம்பர்லேண்ட், கிரேட்டர் மான்செஸ்டர், மெர்சிசைட் மற்றும் வைட் தீவு கூட பாதிக்கப்படாமல் விடப்படும் என சுட்டிக்காட்டப்பட்னடுள்ளது.