போஸ்னியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் கைது
பணமோசடி, பதவி துஷ்பிரயோகம் மற்றும் லஞ்சம் வாங்குதல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்காக போஸ்னியாவின் பாதுகாப்பு அமைச்சர் நெனாட் நெசிக் மற்றும் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2016-20 வரை நெசிக் பொது மேலாளராக இருந்த பொது நிறுவனமான ரோட்ஸ் ஆஃப் ஆர்எஸ்ஸில் ஊழல் நடந்ததாக, அரசு வழக்கறிஞர் மற்றும் பரவலாக்கப்பட்ட போஸ்னியாவின் தன்னாட்சி செர்பிய குடியரசின் (ஆர்எஸ்) உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிறுவனத்தின் தற்போதைய பொது மேலாளர் மிலன் டாக்கிக், நெசிக் தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் மிலாடன் லூசிக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
லூசிக் முனிசிபல் அசெம்பிளியில் துணைப் பதவியில் இருந்தபோது, அலுவலகத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.