ஈராக்கில் அமெரிக்க ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க ராணுவ தள வளாகத்தில் நள்ளிரவில் குண்டுவெடிப்பு பதிவாகியுள்ளது.
அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெசென்கியன் இன்று பாக்தாத்துக்கு வர உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டு வெடிப்பில் எந்தவித அசாம்பாவிதமும் ஏற்படவில்லை.
குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஈரான் ஆதரவு ஈராக்கிய போராளிகள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படை தளங்களை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 19 times, 1 visits today)