பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சாலையில் தூக்கியெறியப்பட்ட சடலங்கள்!
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியின் புறநகர்ப் பகுதியில் மூன்று திருநங்கைகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்தாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடிய சம்பவமானது அந்நாட்டில் மூன்றாம் பாலினத்தவரின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
சாலையோரத்தில் குறித்த மூன்று பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்களின் உடல்கள் உள்ளூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தெரியவராத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 2 times, 1 visits today)





