இலங்கை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்களைப் பயன்படுத்த தடை!
தேர்தல் நடவடிக்கைகளில் சிறுவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தேர்தல்கள் கண்கணிப்பு அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த ஹேரத்தினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இறையாண்மை மற்றும் மக்களின் வாக்குகளை வெறும் பண்டமாக மாற்றாமல் எதிர்கால சந்ததியினருக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு வேட்பாளர்களுக்கு உண்டு என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நினைவூட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறியது: “வாக்காளர்களும் தங்கள் வாக்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி சிந்திக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டியது என்சிபிஏவின் பொறுப்பாகும். இது தேர்தல் ஆணையத்தால் பிரத்தியேகமாக நினைவூட்ட வேண்டிய ஒன்றல்ல” என்றார்.