செய்தி

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ காரணமாக வீடு, கால்நடைகள் அழிவு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் நவம்பர் 17ஆம் திகதியன்று காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் தேசிய பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட 10 மலையேறிகளும் அடங்குவர்.

காட்டுத்தீ காரணமாகக் குறைந்தது ஒரு வீடு அழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.விக்டோரியா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் கூடுதல் வீடுகள் அழிந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.காட்டுத் தீ காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

பலத்த காற்று, கடும் வெப்பம் காரணமாக நவம்பர் 16ஆம் திகதியன்று ஏறத்தாழ 80 இடங்களில் காட்டுத்தீ மூண்டது.தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

விக்டோரியா மாநிலத்தின் மேற்கு மற்றும் தென்பகுதிகளில் உள்ள இரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைப்பது சவால்மிக்கதாக உள்ளது என அதிகாரிகள் கூறினர்.

அப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக 1,900 ஹெக்டர் பரப்பளவு நிலம் சேதமடைந்துவிட்டாகவும் தீயை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றும் விக்டோரியா அவசரகால நிர்வாக ஆணையர் ரிங் நியூஜென்ட் தெரிவித்தார்.

காட்டுத்தீயின் விளைவாகச் சில விவசாயப் பண்ணைகள், காலநடைகள் அழிந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!