சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா எடுத்துள்ள புதிய நடவடிக்கை!

ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்புப் படைகள் இந்த வாரம் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் சீனாவின் பாதுகாப்பு செல்வாக்கை கட்டுப்படுத்த உறுதிப்பூண்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
“இது பரஸ்பர பாதுகாப்பை வழங்குகிறது, அதாவது நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவை வழங்குவோம், எங்கள் சொத்துக்கள் மற்றும் அந்தந்த பாதுகாப்புப் படைகளின் எங்கள் இயங்குதன்மையை ஒருங்கிணைப்பதை வழங்குவோம்” என்று அல்பானீஸ் மேலும் கூறினார்.
கிட்டத்தட்ட 12 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியாவிற்குப் பிறகு தென் பசிபிக் பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக காணப்படுகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவில் ஏறக்குறைய 27 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
சமீபகாலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு மாற்றங்கள் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள மூலக்காரணமாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.