ஆஸ்திரேலியாவில் மீண்டும் நிலநடுக்கம்
மெல்போர்னின் பல வடக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மெல்போர்ன் சிபிடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோக்ஸ்பர்க் பார்க் உள்ளிட்ட பல புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 04.30 மணியளவில் இந்த அசைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது ரிக்டர் அளவுகோலில் 2.2 அலகுகளாக பதிவானது.
உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என ஆஸ்திரேலிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)