இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து!
இலங்கையில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக தற்போது டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரத்து 29 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் 30 ஆயிரத்து 271 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)