சீன் ஆறு சுத்தமாக இருப்பதை நிரூபித்த பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் மேயரான அன்னே ஹிடால்கோ, இந்த மாத இறுதியில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான வெளிப்புற நீச்சல் நிகழ்வுகளை நடத்தும் அளவுக்கு அதன் நீர் சுத்தமாக இருப்பதைக் நிரூபிக்க சீன் ஆற்றில் நீந்தியுள்ளார்.
நீண்ட காலமாக மாசுபட்ட சீன் நதியை சுத்தம் செய்ய குறைந்தபட்சம் $1.5 பில்லியன் (€1.4 பில்லியன்) செலவிடப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டியின் போது கனமழை பெய்தால் சீன் ஓட்டம் பாதிக்கப்படும் பட்சத்தில், டிரையத்லானில் நீச்சல் போட்டி ரத்து செய்யப்படுவதாகவும், மாரத்தான் நீச்சல் போட்டி பாரீஸ் பகுதியில் உள்ள Vaires-sur-Marne Nautical Stadium-க்கு மாற்றப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
(Visited 35 times, 1 visits today)