அஸ்வெசும திட்டம் குறித்து நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்கான பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் ‘புதிய முறைமை நடைமுறையாகும் வரையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு முறைமைகளில் மாற்றம் ஏற்படாது.
குறைந்த வருமானம் கொண்டோர் சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் உட்பட ஏனைய நோய் நிலைமைகளுக்கு உள்ளானவர்களுக்காகஇ தற்போது வழங்கப்படுகின்ற நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவானது நேரடியாக வங்கிகளிலேயே வைப்புச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
(Visited 23 times, 1 visits today)





