யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களில் எவ்வித பலனும் இல்லை – ஹூதி அமைப்பினர்!
யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அதன் திறன்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஹூதிகளின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்சலாம் கூறியுள்ளார்.
செங்கடல் மற்றும் அரபிக் கடல் வழியாக இஸ்ரேலுடன் இணைந்த கப்பல்கள் செல்வதை ஹவுத்திகள் தொடர்ந்து தடுப்பார்கள் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
யேமனின் மற்றுமொரு ஹூதி குழுவின் தலைவரான அன்சருல்லாவின் அதிகாரி ஒருவர் அல் ஜஷீராவிடம் வழங்கிய செவ்வியில் யாருக்கும் காயம் எதுவும், ஏற்படவில்லை என்றும் போராளிகள் பயனுள்ள தாக்குதல்களை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இடம்பெற்ற சில செய்திகளின் சுருக்கம் வருமாறு,
01. இஸ்ரேலின் ஹமாஸ் போருக்கு மத்தியில் செங்கடலில் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதாக ஜோ பிடன் நிர்வாகம் சபதம் செய்ததால், யேமனின் ஹவுதி படைகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது.
02. நேற்றைய தினம் அமெரிக்கா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், ஹவுதி படைகளுக்கு எதிராக வலுவான தாக்குதல்களைநடத்தின. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் இன்று ஹவுதி படையினரின் ரேடார் தளத்தை அமெரிக்கா குறிவைத்துள்ளது.
03.ஏவுகணை அழிப்பான் கார்னி டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஹூதிகளின் திறனைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. யேம