இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றில் இருந்து தப்பிச் சென்ற பெண்

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண் நீதிமன்றிலிருந்து தப்பி சென்ற நிலையில் மீள கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு , விசாரணைகளின் பின்னர் நேற்றுமுன்தினம்  திங்கட்கிழமை (08) நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

நீதிமன்றில் தான் மலசலக் கூடம் செல்ல வேண்டும் கேட்டதற்கு பொலிஸார் இணங்க , நீதிமன்ற வளாகத்தில் உள்ள மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் மலசல கூடத்தினுள் சென்ற பெண், உள்பக்கத்தால் மலசலக் கூட கதவினை மூடிவிட்டு , மலசல கூட்டத்தின் மேற்பகுதியிலிருந்த சிறிய ஜன்னல் ஊடாக தப்பி சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் உள்ளே சென்ற பெண் வராததால் சந்தேகம் அடைந்த பொலிஸார் பெண்ணை அழைத்தும் உள்ளே இருந்து பதில் வராததால் கதவினை உடைத்துப் பார்த்தபோதே, பெண் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. தப்பி சென்ற பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்தவேளை,

போதைப்பொருள் வியாபாரம் நடைபெறும் இடம் என சந்தேகிக்கப்படும் இடத்தினை பொலிஸார் கண்காணித்த வேளை, காலையில் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி சென்ற பெண், அங்கு நடமாடிய நிலையில் மீள கைது செய்யப்பட்டார்.

அதனை அடுத்து கைது செய்யப்பட்ட பெண்ணை மன்றில் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!