அமெரிக்க கடற்படை போர் விமானம் ஒன்று செங்கடலின் அடிப்பகுதியில் மூழ்கியதாக அறிவிப்பு!

USS ஹாரி எஸ். ட்ரூமன் விமானம் தாங்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகி ஒரு வார இடைவெளியில் மற்றுமொரு கடற்படை போர் விமானம் செங்கடலின் அடிப்பகுதியில் மூழ்கியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
F/A-18 F போர் விமானம், இரவு நேரத்தில் கேரியரின் மேல்தளத்தில் தரையிறங்க முயன்றபோது, குழுவினரால் அதை சரியான நேரத்தில் நிறுத்த முடியாமல் பக்கவாட்டில் இருந்து விலகிச் சென்றதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
விமானத்தில் இருந்து விமானிகள் இருவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக அதிகாரி கூறினார்.
(Visited 2 times, 1 visits today)