வட அமெரிக்கா

விரைவில் வெளிவரவுள்ள ஸ்மார்ட் டி.விகளுக்கான ட்டுவிட்டர் வீடியோ செயலி ; எலான் மஸ்க்

எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டரை தன்வசப்படுத்தி கொண்டார். அதன் உரிமையாளரானதும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். உயர் பதவி வகித்த ஊழியர்கள் உள்பட பலரை பணியில் இருந்து நீக்கினார். ட்விட்டருக்கு கட்டண தொகை செலுத்தும் சந்தாதாரர் வசதியையும் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், ட்விட்டரில் ராபின்சன் என்ற கணக்கின் பெயர் கொண்ட பயனாளர் ஒருவர், ஸ்மார்ட் டி.விகளுக்கான ட்விட்டர் வீடியோ செயலி ஒன்று உண்மையில் எங்களுக்கு தேவையாக உள்ளது. ட்விட்டரில் ஒரு மணிநேரம் ஓட கூடிய வீடியோவை என்னால் காண முடியவில்லை என பதிவிட்டு உள்ளார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், அது வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்து உள்ளார்.

Twitter is working on a video app for Smart TVs, Elon Musk says it is coming soon - India Today

இதற்கு அந்த நபர், பாராட்டுகிறேன். யூடியூப்புக்கான சந்தாவை ரத்து செய்து விட்டு, பின்னர் ஒரு போதும் அதனை திரும்பி பார்க்காத ஒரு நாள் வரும். அதனை நான் பார்க்க முடியும் என பதிவிட்டு உள்ளார். ட்விட்டரில் எலான் மஸ்க், பல மாற்றங்களை செய்து வருகிறார். அவர் நேற்று, சில வாரங்களில், புதிய விசயங்களை உருவாக்கி ட்விட்டரில் பதிவிடுபவர்களான கிரியேட்டர்களுக்கு விளம்பரங்கள் வரும்போது, அவர்களுக்கு பணம் அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

அந்த புதிய உருவாக்கும் திறன் வாய்ந்த கிரியேட்டர், ட்விட்டரால் ஆய்வு செய்யப்பட்ட நபராக இருக்க வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு அளிக்கப்படும் விளம்பரங்களாகவும் அவை இருக்க வேண்டும். அந்த, எண்ணிக்கையே கணக்கில் கொள்ளப்படும் என எலான் மஸ்க் பதிவிட்டார். இதேபோன்று, ட்விட்டரில் ஆய்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், 2 மணிநேரம் ஓட கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்