ஐரோப்பிய நாடொன்றில் வெடித்த போராட்டம்; பொலிசாருடன் மோதல்
பிரதமர் எடி ராமா ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டி, அவர் பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சிப் போராட்டக்காரர்கள், அல்பேனியாவின் அரசாங்கக் கட்டிடம் மற்றும் மேயர் அலுவலகம் மீது நேற்று பெட்ரோல் குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ராமாவின் அலுவலகம் முன்பும், பின்னர் ராமாவின் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டிரானாவின் மேயர் அலுவலகத்திலும் கூடி எதிப்பு தெரிவித்துள்ளனர்.
2005-2013 க்கு இடையில் பிரதமராக பதவி வகித்த போது ஊழல் குற்றச்சாட்டுக்காக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சாலி பெரிஷாவை விடுவிக்குமாறும் எதிர்ப்பாளர்கள் கோரினர்.
(Visited 6 times, 1 visits today)