இலங்கை

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில்  தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் மதுரபெரும தலைமையிலான அணியினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஒருவரும் திருட்டு தொலைபேசியினை வாங்கிய குற்றச்சாட்டில் ஊர்காவற்துறைபகுதியைச் சேர்ந்த ஒருவரையுமே யாழ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் கடந்த மூன்று நாட்களுக்குள் திருடப்பட்ட பெறுமதியான தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர்.

அண்மைய யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொலைபேசிகளை யாராவது தொலைத்திருந்தால் அவர்களை நேரடியாக வந்து உரிய ஆவணங்களை ஆதாரங்களை காட்டிதிருடப்பட்ட தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என குற்றத்தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!