அம்பலாங்கொடையில் தற்செயலாக பாய்ந்த துப்பாக்கிக்குண்டு – கான்ஸ்டபிள் படுகாயம்!
அம்பலாங்கொடை காவல் நிலையத்தில் தற்செயலாக துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த கான்ஸ்டபிள் இன்று தனது சர்வீஸ் துப்பாக்கியை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் காலில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது காயங்கள் பெரிதாக இல்லை என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் நடந்த சூழ்நிலையை அறிய காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.





