ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்து – ரயிலுடன் மோதிய பேருந்து – 6 பேர் பலி

ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் பேருந்தும் ரயிலும் மோதிக்கொண்டதில் பேருந்தில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘யூரோசிட்டி 279’ என்ற பெயரிடப்பட்ட ரயில், தலைநகர் பிராட்டிஸ்லாவாவைக் கடந்து, ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டுக்கு எல்லையைக் கடக்கும் போது, ​​இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பேருந்துடன் மோதிய ரயிலின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததாகவும் ரயிலின் சாரதி தீயில் சிக்கி தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் விபத்து சமிக்ஞை அமைப்பு பழுதடைந்ததாலும், புகையிரத கடவையின் கதவுகள் மூடப்படாததாலும் பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!