ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்

ஆஸ்திரேலியா சிட்னியில் 32 வயதான இந்தியர் ஒருவரை கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய பொலிஸாரால் அவர் நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது என்று சிட்னியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஆபர்ன் ரயில் நிலையத்தில் 28 வயது துப்புரவுத் தொழிலாளியை நேற்று முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸாரையும் தாக்க முயன்றதால் முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமதுவை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமதுவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித