மக்களை பாதுகாக்க எதுவும் செய்வோம் : ஈராக்கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!
ஈராக்கின் ஸ்திரத்தன்மை மற்றும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) குட்ஸ் படை மற்றும் அதனுடன் இணைந்த போராளிக் குழுக்களுக்கு எதிரான தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) கமாண்டர் ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கப் படைகள் ஈராக் மற்றும் சிரியா இரண்டிலும் ஈரான் ஆதரவு போராளி நிலைகளை குறிவைத்தன.
“ஈராக், பிராந்தியம் மற்றும் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) குட்ஸ் படை மற்றும் அதனுடன் இணைந்த போராளிக் குழுக்கள் தொடர்ந்து நேரடி அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இந்நிலையில் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம், எங்கள் மக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம், மேலும் அவர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நபர்களை பொறுப்பேற்கச் செய்வோம்” என்று ஜெனரல் மைக்கேல் கூறினார்.