உக்ரைன் உடனடியாக தனது தவறுகளை சரிசெய்ய வேண்டும் : சீனா எச்சரிக்கை
“சர்வதேச போரின் ஆதரவாளர்கள்” என்று நியமிக்கப்பட்டுள்ள கிய்வின் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து சுமார் 14 சீன நிறுவனங்களை உக்ரைன் உடனடியாக நீக்க வேண்டும் என்று சீனா கோரியுள்ளது.
பட்டியலில் உள்ள நிறுவனங்களைச் சேர்ப்பது இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்று கிய்வில் உள்ள சீனத் தூதர் கடந்த மாதம் உக்ரேனிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
“சீன நிறுவனங்களை தொடர்புடைய பட்டியலில் சேர்ப்பதை சீனா உறுதியாக எதிர்க்கிறது மற்றும் உக்ரைன் உடனடியாக தனது தவறுகளை சரிசெய்து எதிர்மறையான தாக்கங்களை அகற்ற வேண்டும் என்று கோருகிறது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிடப்பட்டடுள்ளார்,
(Visited 5 times, 1 visits today)