மனித மூளையில் சிப் பொறுத்தும் திட்டம் குறித்து வெளியான முக்கிய தகவல்!
எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், கைகால்களை அசைக்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் எண்ணங்களைப் பயன்படுத்தும் திறனை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதித்து வருகிறது.
நிறுவனம் தனது சமீபத்திய நடவடிக்கையாக மனித மூளையில் வயர்லெஸ் ‘சிப்பை’ வெற்றிகரமாக பொருத்தியுள்ளது. இதுபோன்ற மூளைச் சிப்பை மனிதனிடம் முதன்முதலில் பரிசோதித்தது இந்நிறுவனம்தான்.
சிப் பொருத்தியவர் தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியில் மனித முடியை விட நுண்ணிய 64 நெகிழ்வான இழைகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மனித மூளை கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்பு டெலிபதி என்று அழைக்கப்படுகிறது, இது சிக்கலான நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உதவ உருவாக்கப்பட்டது.
ஆறு ஆண்டு கால முயற்சிக்கு பிறகு மே மாதம் இந்த தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் சோதனை செய்ய அந்நிறுவனம் அனுமதி பெற்றது.