அமெரிக்காவில் பிஸ்கட் சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!
மேற்கு இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஒர்லா பாக்செண்டேல் (25). தொழில்முறை நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடர்வதற்காக பாக்செண்டேல் நியூயார்க்கிற்குச் சென்றார்.
கடந்த 11ம் திகதி பாக்செண்டேல் வெண்ணிலா புளோரன்டைன் எனப்படும் பிஸ்கெட்டை சாப்பிட்டார். இந்த நிலையில் சிறிது நேரத்திற்குள் உடல் முழுவதும் ஒவ்வாமை ஏற்பட்டு பாக்செண்டேல் உயிரிழந்தார்
![]()
விசாரணையில், அவருக்கு வேர்க்கடலை அலர்ஜி உள்ளதும், அவர் சாப்பிட்ட பிஸ்கெட்டில் வேர்க்கடலை சேர்க்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. பிஸ்கெட் பாக்கெட்டில் வேர்க்கடலை குறிப்பிடப்படாததால் அது தெரியாமல் சாப்பிட்டதால் பாக்செண்டேல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





