இலங்கையில் 3000 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பொலிஸாரால் பறிமுதல்
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த சொத்துக் கைப்பற்றப்பட்டதன் பெறுமதி 2938.73 லட்சம் ரூபா என பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் கீழ் எடுக்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 1427 இலட்சம் ரூபாவாகவும் காணி வீடுகள், ஸ்பாக்கள் மற்றும் ஆடம்பர வில்லாக்கள் போன்றவற்றின் பெறுமதி 1370 லட்சம் ரூபாவாகும்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 140.5 லட்சம் ரூபாயாகும். ஒரு லட்சத்து 23ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நீதித் திட்டத்தின் கீழ் கடந்த 19ஆம் திகதி முதல் சொத்துக்கள் கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வேன்கள், மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், டிப்பர்கள், பேருந்துகள், மீன்பிடிக்கப்பல் என 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அங்குள்ள இரண்டு சொகுசு வில்லாக்கள் மற்றும் ஸ்பா கட்டிடம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியதாக பொது பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் அடையாளம் காணப்பட்ட 109 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நூறு கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.