உலகவளவில் திடீரென முடங்கியது எக்ஸ் தளம்… தவிக்கும் பயனாளர்கள்!
உலகளவில் எக்ஸ் தள பயன்பாடு முடங்கியுள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக எக்ஸ் தளம் முடங்கியதால் அதன் பயனாளர்கள் தவித்து வருகின்றனர்.
உலக அளவில் எக்ஸ் சேவை மீண்டும் முடங்கியுள்ளது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எக்ஸ் சேவையை மக்கள் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. எக்ஸ் செயலி மற்றும் இணையதள பக்கத்திலும் அதை பயன்படுத்த முடியவில்லை என சிலர் தெரிவித்துள்ளனர். எக்ஸ் பயனர்கள் தங்களது போஸ்ட்கள் தெரியவில்லை என்றும் ஹோம் பக்கத்தில் வெகு நேரமாக ‘ட்ரை அகைன்’ மற்றும் லெட்ஸ் கோ என்று மட்டுமே வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் தளம் சரிவர செயல்படாத நிலையில் அதனை தங்களது மற்ற சமூக வலைதளங்களில் பயனாளர்கள் கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர். சிலர், ‘வெல்கம் டு எக்ஸ்’ என்றால் என்ன? எக்ஸ் புதிதாக பிறந்துள்ளதா? என்பது போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ, எக்ஸ் நிறுவனத்தில் இருந்து பொறியாளர்களை வேலையைவிட்டு நீக்கிய பிறகு இப்படிதான் இருக்கும் என்றும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
எக்ஸ் தலைமையகத்தில் எலான் மஸ்க் மட்டும் எக்ஸ் சேவையை சீர் செய்வதற்காக சர்வர் அறையில் முயற்சி செய்து கொண்டிருப்பார் என்று கேலிக்குள்ளாகும் வகையில் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளத்தில் கூறி வருகின்றனர்.